தமிழரசுக்கட்சியை இல்லாதொழிக்க வேண்டும் பல கூட்டணிகள் செயற்படுகின்றன என
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்(C. V. K. Sivagnanam )தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் மக்கள் தொடர்பாக ஜேவிபினுடைய நிலைபாடு என்ன என்பதை அவர்கள் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.
தமிழ்கட்சிகள் எந்த தேர்தலிலாவது தெற்கிலே சென்று போட்டியிடுகின்றோமா?
நீங்கள் வடக்கில் வந்து தேர்தலில் போட்டியிடுவது எந்த விதத்தில் நியாயம்?
தமிழரசுக்கட்சி இன்றுவரை தமிழ் தேசியத்தோடு தான் நிற்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

