இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் வடக்கில் ஒரு தெற்கு அரசியல் கட்சி ஆதிக்கம் செலுத்திய வரலாற்றை இந்த ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தல் வெளிப்படுத்தியிருந்தது.
வடக்கிலும் – கிழக்கிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்பு மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள் எதிர்கால அரசியலில் மக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை எடுத்துக்காட்டியது.
இது யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் தொகுதிகளின் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை கைப்பற்றியதின் முடிவில் தெளிவாகியது.
மேலும், கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால், மட்டக்களப்பு மட்டுமே தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிவுகளைத் தந்துள்ளது.
மொத்தமுள்ள 6 இடங்களில் தமிழரசுக் கட்சிக்கு 3 இடங்களும் தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைக்கப்பெற்றது.
இந்த நிலைப்பாட்டுக்கு இதுவரை காலமும் தமிழ் தேசியப்பரப்பில் இருந்த பழைமை அரசியல்வாதிகளை மக்கள் வெறுத்தமையே காரணம் என சில கருத்துக்கள் எழுந்திருந்தன.
இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனடாவில் உள்ள சுவாமி மணி சங்கரானந்தா வடக்கு கிழக்கின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தார்.
வடக்கில் உள்ள முன்னாள் அரசியல் தலைமைகளின் போக்குகளும், அதனை அநுர தரப்பு எவ்வாறு சாதகமாக்கினார் என்பது தொடர்பிலும் கீளுள்ள காணொளியில் விளக்கியுள்ளார்…