முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன்(Joe Biden )விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவர் விலகியதற்கு கட்சியினர் கொடுத்த கடுமையான அழுத்தமே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோ பைடன் தற்போது தேர்தலிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

அண்மையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில்,நேற்று முன் தினம் வரை ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவது இல்லை என விடாப்பிடியாய் கூறி வந்து இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல்

எனினும் நேற்றையதினம்(21) பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசையும்(Kamala Harris) முன்மொழிந்து உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன! | Why Did Joe Biden Drop Out The Us Election

இந்த முடிவானது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்க குடும்ப உறுப்பினர்களும் ஜோ பைடனுக்கு போட்டியில் இருந்து விலக அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள்.

இது போக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா(Barack Obama), முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

 ஜோ பைடன் விலகல்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று வெளிப்படையாக கூறினர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன! | Why Did Joe Biden Drop Out The Us Election

இதனால், அடுத்தடுத்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது டெலாவர் இல்லத்தில் தனிமையில் ஓய்வு எடுத்து வந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்து இருக்கிறார்.

எனவே, ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திடீரென விலகியிருப்பதால் மீண்டும் ஜனநாயக கட்சியினர் கூடி புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

பெரும்பாலும் கமலா ஹாரிஸ்க்கே இதில் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.