முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல்

தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரை திடீரென கைது செய்தால் அது தொடர்பில் அவரிடம் விசாரிக்க வேண்டிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவிடம் (ranil wickremesinghe) இருந்த காரணத்தாலேயே அவர் தொடர்பு கொள்ள முயன்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள(thalatha atukorale) தெரிவித்துள்ளார். 

கேகாலையில் (kegalle) நேற்று (20)செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரைப் பற்றி விசாரிப்பது எமது பொறுப்பு

பிள்ளையான் திடீரென காவலில் எடுக்கப்பட்டபோது, அவரைப் பற்றி விசாரிப்பது எமது பொறுப்பு .அதனால்தான் ரணில் விக்ரமசிங்கஅந்தப் பொறுப்பை மட்டுமே நிறைவேற்ற முயன்றார். இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல் | Why Did Ranil Try To Contact Pillayan

மேலும், முன்னாள் ஜனாதிபதியை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்து, பிள்ளையானுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும் எனவும் தலதா வேண்டுகோள் விடுத்தார்.

மறைப்பதற்கு எதுவுமில்லை

 “இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. முன்பு பட்டலந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள், இப்போது இந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி பேசுகிறார்கள். மேலும், சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக ரணில் கருத்து தெரிவித்தது குறித்தும் வாக்குமூலம் பதிவு செய்ய விரும்புகிறார்கள். நாங்கள் இவற்றை எதிர்கொள்ளத் தயார். நாங்கள் எதையும் மறைக்கவில்லை, மறைந்து கொள்ளவும் இல்லை, மற்றவர்களாலும் மறைக்க முடியாது,” என்று தலதா மேலும் தெரிவித்தார்.

பிள்ளையானுடன் ரணில் தொடர்பு கொள்ள முயன்றது ஏன்..! வெளியானது பரபரப்பு தகவல் | Why Did Ranil Try To Contact Pillayan

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தல்  தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிள்ளையான் ஏப்ரல் 9 அன்று மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/gwCWEYUdNMI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.