நடிகை சித்தாரா
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்தும் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து இப்போதும் மக்களின் கவனத்தில் இருப்பவர் நடிகை சித்தாரா.
எலிமினேட் ஆன தீபக்கிற்கு மாஸ் வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ
படங்கள் மட்டுமில்லாது சீரியல்களிலும் நடித்துள்ள இவர் 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
பின் தமிழில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் படத்தில் நடித்து அறிமுகமானார்.
தொடர்ந்து 38 ஆண்டுகளாக வெள்ளித்திரை, சின்னத்திரை என பயணித்து வருகிறார்.
திருமணம்
50 வயதிற்கு மேல் ஆகியும் சித்தாரா திருமணமே செய்துகொள்ளாமல் உள்ளார். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், மௌனத்தையே எப்போதும் பதிலாக கொடுக்கிறார்.
சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமல், எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் டீசண்டான நடிகையாக தொடர்ந்து நடித்து வருகிறார்.