நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு கிடைக்காவிடின் புதிய கூட்டணியின் கீழ் அதிபர் வேட்பாளராக விஜயதாச ராஜபக்சவை(wijeyadasa Rajapakse) களமிறக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக நீதிமன்றில் வழக்குகளை முன்வைத்து தடைகள் மேற்கொள்ளப்பட்டாலும், விஜயதாச ராஜபக்சவை கட்சியின் தலைவராக நியமிக்கும் முயற்சியை கைவிடப் போவதில்லை என கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச(Rohana Laksman Piyadasa) தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியில் களமிறக்கம்
அது முடியாத பட்சத்தில் விஜயதாச ராஜபக்ச புதிய கூட்டணியுடன் அதிபர் தேர்தலில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பான முடிவை விரைவில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய கூட்டணி அமைப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.