பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான (WikiLeaks founder) ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் சிறையில் இருந்து ஜூலியன் அசாஞ்சே (ulian Assange) இன்று விடுதலையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலை பெற்ற அசானஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு (Australia) திரும்புவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலை
விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர்.
அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு லண்டனில் (london) உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் (America) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
https://www.youtube.com/embed/VpjA7MGSACk