சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்ரீனிவாசன், சைந்தவி, ஸ்வேதா மோகன், எஸ்.பி. சரண் ஆகியோர் உள்ளனர்.
மேலும் அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சரிகமப சீசன் 4ல் இதுவரை மூன்று போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அட்லீ-அல்லு அர்ஜுன் புதிய படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் பெறுகிறார்களா?
ஹெமித்ரா, ஸ்ரீமதி, மற்றும் யோகஸ்ரீ ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 4வது இறுதி போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
4வது இறுதி போட்டியாளர்
அதன்படி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஆதரவும் வரவேற்பும் உள்ளதால், 4வது இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று.