சூப்பர்ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமான ஒருவர். பல முன்னணி நடிகர்களே ரஜினியின் ரசிகர்களாக இருப்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் அவர், அடுத்த ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க போகிறார். அதன் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.
அட்லீ – ரஜினி
இந்நிலையில் அட்லீ அடுத்து ஹிந்தியில் இயக்க போகும் பிரம்மாண்ட படத்தில் சல்மான் கான் உடன் ரஜினியும் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினி – சல்மான் – அட்லீ கூட்டணி சேர்ந்தால் படம் நிச்சயம் 2000 கோடியை வசூலிக்க வாய்ப்பிருக்கிறது என தற்போதே சினிமா துறையினர் பேச தொடங்கி இருக்கின்றனர்.