Courtesy: Sivaa Mayuri
கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நிர்வாகத்தில் காணப்பட்டது போல் ஒவ்வொரு புதிய அரசாங்கமும் தேனிலவு காலத்தை அனுபவிக்கிறது. எனினும் இந்த அரசாங்கத்தின் உண்மையான தோற்றம், காலப்போக்கில் வெளிப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி, இன்று தேசிய மக்கள் சக்தியாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஜேவிபி கட்சி
இந்தநிலையில், ஜேவிபிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.
எனினும், நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது.
ஜே.வி.பி, எமது முன்னாள் கட்சியாக இருந்தப்படியால், தற்போதைய அரசாங்கத்தின் தேசத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என குறிபப்பிட்டுள்ளார்.
[10QKOIZ