கருணா அம்மான் மற்றும் பிள்ளையானுடன் இருக்கும் முன்னாள் போராளிகள் மன வேதனையுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு அழுத்தம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கருணா அம்மான் மற்றும் பிள்ளையானின் ஆட்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இவை ஊடகங்களில் வெளிவருவதில்லை.
விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குழுக்கள் கிழக்கில் கடத்தல், துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் மீது பொலிஸார் கைவைப்பதில்லை.
புலனாய்வு பிரிவினரும் இது தொடர்பில் தேடுவதில்லை. இராணுவ புலனாய்வு துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இராணுவ புலனாய்வு துறைக்கு 60 வீதம் பணியாட்கள் பற்றாக்குறை காணப்படுகிறது.
அதனால் யாரும் புதிதாக சேர்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் டயஸ்போராக்களின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்படுகின்றன எனவும் அவர்கள் இதற்கு பணம் வழங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.