“நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே வெற்றி பெற்றவர்கள்
தெரிவு செய்யப்படுவார்கள். எனவே, அதில் மக்கள் சந்தேகமடையத் தேவையில்லை என்று தேசியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ம.ஜெகதீஸ்வரன் ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய சக்தி மிக்க வேட்பாளர் அணி வன்னியில் களம்
காண்கின்றது. அந்தவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஊழல், மோசடி ஏனைய
துஷ்பிரயோகங்கள் அற்ற நேர்மையான ஆட்சியை அமைப்பதற்கு நாங்கள் ஒன்று
திரண்டுள்ளோம்.
மக்களின் ஆணை
மக்களின் ஆணைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.
மக்கள் ஆணையைப் பெற்று சமாதானமாக – நிம்மதியாக வாழக்கூடிய ஒரு தேசத்தைக்
கட்டியெழுப்புவோம்.
இதேவேளை, ஊழல், மோசடி பேர் வழிகளை நிராகரிக்க வேண்டும்
என்று மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
இன்று ஜனாதிபதியின் பெயரைக் கூறி பல சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன
என்று போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவரது கையை வலுப்படுத்தும்
ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி என்பதை கூறிக்கொள்கின்றேன்.
தேசிய மக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை
அவ்வாறானவர்களை
மக்கள் நிராகரிக்க வேண்டும்.
அத்துடன் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் விருப்பு
வாக்கு முறைமை பார்க்கப்படாது என்று கூறுவது போலியான ஒரு கருத்துருவாக்கமே.
இம்முறை விருப்பு வாக்கின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தெரிவு
செய்யப்படுவார்கள். அது தொடர்பாக எமது செயலாளர் ரில்வின் சில்வாவும்
தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்கள் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் அடையத் தேவையில்லை. நிச்சயமாக கூடுதலான
விருப்பு வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு
அவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.” – என்றும் தெரிவித்துள்ளார்.