தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் – மடு
பகுதியைச் சேர்ந்த குமணன் தனுசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனக்கு
தானே தீ வைத்துள்ளார்.
முரண்பாடு
இதனால் தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முருங்கன்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

