அமெரிக்காவில் 63 ஆண்டுகளுக்கு முன்னர் காணமால் போன ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 1962ஆம் ஆண்டு ஒட்ரி பெக்பெர்க் என்ற பெண் 20ஆவது வயதில் விஸ்கான்சின் ரீட்ஸ்பர்க்கில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போனார்.
அவர் காணாமல் போவதற்கு முன்னர், தனது கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பலனளிக்காத விசாரணைகள்
இதனையடுத்து, அவர் காணாமல் போன நாளில், தனது சம்பளத்தை வாங்கிவிட்டு தனது வளர்ப்பு தாயுடன் மெடிசனுக்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர், பேருந்து ஏறி இண்டியானாபோலிஸுக்கு
பயணித்துள்ளார்.
இதனையடுத்து, இது குறித்து பொலிஸார் பல நாட்கள் விசாரணை நடத்தியும் ஒட்ரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
எந்தவொரு வருத்தமும் இல்லை
எவ்வாறாயினும், இந்த ஆண்டு குறித்த வழக்கை மீண்டும் கையிலெடுத்த பொலிஸார், அவரது சகோதரியின் DNAஐ வைத்து ஒட்ரியை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது 82 வயதாகும் ஒட்ரி பெக்பெர்க், விஸ்கன்சினுக்கு அருகில் வசிப்பதாகவும் அவருடன் பேசியதாகவும் ஒரு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, தான் எடுத்த முடிவு குறித்து தனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை என ஒட்ரி தெரிவித்துள்ளார்.

