ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் பெண்ணொருவரினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட பொது, பெண்ணொருவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
பலத்த வரவேற்புடன் ஜனாதிபதி மேடைக்கு அழைத்து வரப்பட்ட போது, மேடையின் முன்பிருந்த பெண்ணொருவர் கவலையுடன் இருந்துள்ளார்.
ஜனாதிபதியின் உரை
இதனை அவதானித்த ரணில், குறித்த பெண்ணின் பிரச்சனை தொடர்பில் ஆராயுமாறு தனது குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரணிலின் குழுவினர் கேட்ட போது, “இவர் எங்கள் ஜனாதிபதி. நான் சிறு வயது முதல் ஜனாதிபதியின் உரைகளை கேட்கிறேன். இன்று அவருக்கு வயதாகிவிட்டது. அவர் மாற்றமடைந்துள்ளார் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி
இதனால் நெகிழ்ச்சி அடைந்த ஜனாதிபதி, அழுது கொண்டிருந்த பெண்ணின் மகளை தான் அமர்ந்திருந்த மேடைக்கு அழைத்து உரையாடியுள்ளார்.
அதேவேளை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அழுது கொண்டிருந்த பெண்ணையும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இலங்கையின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அடுத்த ஜனாதிபதியாக நீங்களே வர வேண்டும் என அந்தப் பெண் இதன்போது கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.