உலக அரங்கில் இந்த ஆண்டின் உலகில் மிகவும் பாதுகாப்பாக சுற்றுலா செய்யக்கூடிய நாடாக கனடாவிற்கு (Canada) சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயமானது அமெரிக்காவின் (America) சுற்றுலா காப்புறுதி நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் பிரகாரம் உலகின் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா செய்யக்கூடிய நாடுகளின் வரிசையில் கனடா முதலிடத்தையும் சுவிட்சர்லாந்து (Switzerland) இரண்டாம் இடத்தையும் நோர்வே (Norway) மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
கிடைத்த அங்கீகாரம்
எனினும், கனடா மிகவும் பாதுகாப்பான நாடு என்ற போதிலும் நாட்டின் சில காட்டுப் பகுதியில் நிலவி வரும் காட்டுத்தீயை அண்டிய பகுதிகளிலான காற்றை சுவாசிப்பதனால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் எனவும் இவ்வாறான பகுதிகளுக்கு சுவாச பிரச்சனையுடையவர்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வன்முறைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாடுகளின் வரிசை பட்டியலில் முதல் 15 இடங்களில் அவுஸ்திரேலியா (Australia), பிரித்தனியா (United Kingdom), நெதர்லாந்து (Netherlands), ஜப்பான் (Japan), பிரான்ஸ் (France) மற்றும் பிரேசில் (Brazil) போன்ற நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.