ரஷ்யாவிலுள்ள, கோலா சூப்பர் டீப் போர்ஹோல், பூமியின் மிக ஆழமான செயற்கைப் புள்ளியாக, கிட்டத்தட்ட 12,262 மீட்டர்கள் (40,230 அடி) நிலத்தினுள் சென்று சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்த துளையின் ஆழம் எவரெஸ்ட் சிகரம் மற்றும் ஜப்பானின் புஜி மலை ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உயரத்திற்குச் சமமாகும்.
இந்த குழியினை தோண்டும் பணியானது மே 24, 1970-ல் ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் ஆரம்பமானது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு 1992 வரை இந்தப் பணி தொடர்ந்தது, மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளையை உருவாக்கும் லட்சியத்தை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது, அதன்பொருட்டு காலங்கள் கடந்தும் குழி உருவாக்கத்திற்கான பணிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது
இந்நிலையில் துளை ஆழமாகச் சென்ற போது, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆழ்துளை கிணறு இறுதியில் பூட்டப்படும் நிலைக்கு சென்றது, அதுமாத்திரமல்லாமல் இந்த திட்டம் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டது.
ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி சேவை நீடிப்பு கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்
போட்டி இருந்தது
சோவியத் ஒன்றியம் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக துளை தோண்டுவதில் முதலீடு செய்தது. திட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நேரத்தில், பூமியின் மேற்பரப்பு மட்டும் கீறிவிட்டது போன்ற தன்மை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
தவிரவும், பனிப்போர் முழுவதும், சோவியத் ஒன்றியம் மாத்திரமல்லாமல், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற உலகளாவிய வல்லரசுகளிடையே பூமியின் மேலோட்டத்தை ஆழமாக தோண்டி, பூமியின் மையத்தை கூட அடைய ஒரு போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த துளையிடுதல் தொடங்கப்பட்ட போது, அவர்கள் தண்ணீரைக் கண்டுபிடித்ததாகக் கூறினர், அது பெரும்பாலான விஞ்ஞானிகளால் நம்பப்படவில்லை, மேற்கத்திய விஞ்ஞானிகளிடையே பொதுவான புரிதல் இருந்தது, மேலோடு 5 கிலோமீட்டர் கீழே மிகவும் அடர்த்தியானது, அதன் வழியாக தண்ணீர் ஊடுருவ முடியாது’ என்று கூறினர்.
கோடையில் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றீர்களா! இதை முயற்சி செய்து பாருங்கள்…
அமானுஷ்யமான சத்தங்கள்
துளையிடும் செயற்பாட்டின் போது, துளையில் வளைவுகள் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, முடிந்தவரை செங்குத்தாக துளையிடுவது முக்கியம் என்பதை ரஷ்யர்கள் அறிந்து கொண்டனர். இந்த சவாலை தவிர்க்க, அவர்கள் செங்குத்து துளையிடும் அமைப்புகளை உருவாக்கினர்.
அதோடு இந்தத் திட்டத்திற்காக அவர்கள் சிறப்பாக பணியாற்றினர், துளை அதன் செங்குத்து பாதையில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்தது. துரதிஷ்டவசமான, நேரம் காரணமாக தேவையான உபகரணங்களைப் பெறுவது சவாலானது, அதன்பின் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதோடு இந்தத் திட்டத்திற்காக அவர்கள் சிறப்பாக பணியாற்றினர், துளை அதன் செங்குத்து பாதையில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்தது. துரதிர்ஷ்டவசமான, நேரம் காரணமாக தேவையான உபகரணங்களைப் பெறுவது சவாலானது, அதன்பின் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆழமாக துளையிடுவதே உண்மையான திட்டமாகும், ஆனால் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் திட்டம் விரும்பிய ஆழத்தை அடைய முடியவில்லை என்றும் பணியில் ஈடுபட்டவர்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வந்ததனால் வேறுவழியின்றி இந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது மாத்திரமன்றி குழியினை மூடவும் தீர்மானிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமன்றி குழியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அந்தக் குழியிலிருந்து அமானுஷ்யமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தமையும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவது மாத்திரமன்றி, அது நரகத்திலிருந்து வெளிப்படும் ஒலி என்றும் மக்கள் இன்றளவும் நம்பி வருக்கிறார்கள்.
கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |