தக் லைஃப்
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கூட்டணி கமல் – மணிரத்னம். நாயகன் படத்திற்கு பின் இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்த்தனர்.
கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பின் தக் லைஃப் படத்திற்காக இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. இதனாலேயே தக் லைஃப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.


யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.. அந்த விஷயம் குறித்து நடிகை சமந்தா ஓபன் டாக்
மேலும் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம், ட்ரோல் மறுபக்கம் என படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், உலகளவில் 10 நாட்களில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படுதோல்வியடைந்துள்ள இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 89 கோடி வசூல் செய்துள்ளது.

