தமிழ் சினிமாவில் எப்போதும் அவ்வபோது பெண்களுக்கான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கும், அந்த வகையில் பெப்பின் ஜார்ஜ் இயக்கத்தில் ரூபா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள எமகாதகி எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
தஞ்சாவூர் பகுதில் ஒரு ஊரில் காப்பு கட்டும் தகவலுடன் படம் தொடங்குகிறது. படம் தொடங்கி சில நிமிடங்களிலேயே ஹீரோயின் ரூபாவிற்கும் அவருடைய தந்தைக்கும் சண்டை வருகிறது.
அதில் ரூபா தந்தை ஓங்கி அறைய, ரூபா தற்கொலை முடிவை எடுக்கிறார்.
இதை தொடர்ந்து ரூபா-வின் உடலை சம்பிரதாய சடங்குகள் செய்து எடுக்கும் நேரத்தில் கட்டிலை அசைக்க கூட முடியவில்லை.
எல்லோருக்கும் இது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
என்ன செய்தாலும் ரூபாவின் பூத உடல் நகர மறுக்க, உண்மையிலேயே ரூபாவிற்கு என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களே இப்படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
எத்தனையோ பேய் அமானுஷிய படங்களை பார்த்திருப்போம், ஆனால், ஒரு பெண் தன் இறப்பிற்கு தானே நீதிக்கேட்டு போராடும் அளவிற்கு ஒரு கதையை, அதிலும் கண்டிப்பாக இந்த கால கட்டத்திற்கு ஏற்ற ஒரு களத்தை தேர்ந்தெடுத்து எடுத்ததற்காகவே இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
அதே போல் படத்தின் நாயகி ரூபா ஒரு பிணமாக படத்தின் பெரும்பகுதி இவர் அசையாமல் நடித்திருப்பது பிரமிக்க வைக்கிறது, கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு.
ஹீரோயினை தாண்டி படத்தில் நம்மை மிகவும் கவர்வது அம்மாவாக வரும் கீதா கைலாசம் தான், தன் யதார்த்த நடிப்பால் கவர்கிறார்.
படத்தின் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் காட்சிகளாக கொண்டு சென்றிருக்கலாம், நிறைய வசனங்களாகவே காட்சிகள் நகர்கிறது, அதில் மெருகேற்றி இருந்தால் இன்னமும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
ஒரு வீட்டில் நடக்கும் கதை, எப்படித்தான் கேமராவை வைத்து எடுத்தார்களோ என்று கேட்கும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் சபாஷ் வாங்குகிறார்.
இசையமைப்பாளர் ஜெசீனும் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
க்ளாப்ஸ்
கதைக்களம் மிக சுவாரஸ்யமாக உள்ளது.
நாயகி ரூபாவின் நடிப்பு மற்றும் கீதா கைலாசம் நடிப்பு
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னும் விறு விறுப்பான காட்சிகளாக நகர்த்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு பெண் தனக்கான நீதியை இருக்கும் போதும் சரி, இறந்த போதும் சரி தொடர்ந்து போராட வேண்டும் என்பதை காட்டிய விதமே எமகாதகியை எழுந்து நிற்க வைக்கிறது.
[