யாஷ்
கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இவர் நடித்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.


என் பாடல்களை ஹிந்தியில் கேட்க பிடிக்கவில்லை.. ஏ.ஆர்.ரஹ்மான் உடைத்த ரகசியம்!
தற்போது அவருடைய 19வது திரைப்படமான டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநரான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து மும்பை, பெங்களூரு என நடந்து கொண்டிருக்கிறது.
படக்குழுவினர் அதிர்ச்சி!
இந்நிலையில், “டாக்ஸிக்” திரைப்படத்தில் யாஷ் மேல் சட்டை இல்லாமல் பால்கனியில் நின்று நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையத்தில் கசிந்த இந்த வீடியோவை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


