முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யோஷிதவின் கைதை தொடர்ந்து இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரபல அரசியல்வாதி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட பிரபல அரசியல்வாதியான நிமல் லான்சா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆட்சியின் போது மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை குறி வைத்து சமகால அநுர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரான நிமல் லான்சா நேற்று முன்தினம் இரவு திடீரென நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநாடு சென்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோஷிதவின் கைதை தொடர்ந்து இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரபல அரசியல்வாதி | Yositha Arrested Vip Escaped From Sri Lanka

லான்சாவின் குடும்பத்தினர் சிறிது காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட போது லான்சாவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு சிறிது காலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.

கடுமையான குற்றங்கள்

கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசடி, ஊழல், கொலை மற்றும் சொத்துக்களை அபகரித்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பான 11 வழக்குகளைத் தாக்கல் செய்ய தேவையான கோப்புகளை பொலிஸார், சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யோஷிதவின் கைதை தொடர்ந்து இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரபல அரசியல்வாதி | Yositha Arrested Vip Escaped From Sri Lanka

இந்நிலையில், நிமல் லான்சா நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்குகளில் முந்தைய அரசாங்கங்களின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்