இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை, என இலங்கை நீதி அமைச்சர்
தெரிவித்த கருத்திற்கு அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இன்று (18) அவர் யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்
போதே அவர் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் இலங்கை நீதி அமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும்
இல்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே
உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தமது சுயநலத்துக்காக
போராடவில்லை. அவர்கள் தமது இனத்துக்காக போராடியவர்கள்.
அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் அரசியல் கைதிகள் என்றும்
நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியல்
இயக்கமாகும்.
அதன் மத்திய குழுவில் இருப்பவர்கள் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்கள், அவர்கள் தவறு இழைக்கின்ற போது மக்கள், சிவில் சமூகங்கள் தலையிட
வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.