நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் விடாமுயற்சி படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. அடுத்து அவரது குட் பேட் அக்லி படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்துவதால் அதற்காக வெளிநாட்டில் தான் அடுத்த பல மாதங்களுக்கு இருக்க போகிறார்.
லிங்குசாமி
இந்நிலையில் நடிகர் அஜித் தோற்றம் மற்றும் குரல் ஆகியவற்றை பார்த்துவிட்டு ‘நீங்க எம்ஜிஆர் மாதிரி இருக்கீங்க’ என சொன்னாராம் இயக்குனர் லிங்குசாமி.
‘பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க’ என அதற்கு பதில் கூறினாராம் அஜித். இந்த விஷயத்தை தற்போது ஒரு பேட்டியில் லிங்குசாமி தெரிவித்து இருக்கிறார்.