மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி –
பாலைநகர் பகுதியில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (22.08.2024) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.