டான்ஸ் ஜோடி டான்ஸ்
சின்னத்திரைக்கு மக்களிடம் நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது.
இதனால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மக்களை ஈர்க்கும் வகையில் நிறைய புத்தம் புதிய தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களை களமிறக்கி வருகிறார்கள்.
அப்படி இப்போது ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 Reloaded சீசன் பற்றிய தகவல்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
போட்டியாளர்கள்
கடந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
பிரம்மாண்டமான இந்த ஷோவை ஆர்.ஜே.விஜய் மற்றும் வி.ஜே. மணிமேகலை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
சூப்பராக நடந்த ஆடிஷனின் 12 போட்டியாளர்கள் தேர்வாக அவர்களுடன் 12 சின்னத்திரை பிரபலங்கள் நடனம் ஆட உள்ளனர்.
அவர்களின் லிஸ்ட் இதோ,
- திலிப் – மெர்சினா
- தில்லை நடராஜன் – மான்யா
- ஜனுஷ்கா – சபரீஷ்
- அருண்குமார் – கெமி
- மோகன் – ஸ்ரீயா சுரேந்தர்
- பஞ்சமி – கதிர்
- பிரகாஷ் – ரவீனா
- ஆல்வின் – பர்வீன்
- பிரஜ்னா ரவி – காகனா
- அதிதி – சுகேஷ்
- கிரித்திகா – தீபக்
- நிதின் – தித்யா பாண்டே