முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி மோதல் : உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

அமெரிக்க (United States) ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) மற்றும் ஜெலென்ஸ்கி வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (28.02.2025) வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதுடன் போர் நிறுத்தம் குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

போர் நிறுத்தம் 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த விவாதங்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது, பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

கடும் வாக்குவாதம்

இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அமெரிக்காவின் துணை ஜனாதிபதியை அழைத்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறுக்கிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் “உங்களிடம் போதுமான துருப்புகள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய கவுன்சில்

இந்நிலையில், டிரம்ப்-ஜெலென்ஸ்கி-வான்ஸ் இடையிலான வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.

போலந்து பிரதமரும், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருமான டொனால்ட் ட்ஸ்க் X தளப் பதிவில், “உக்ரைன் தோழர்களே, நீங்கள் தனியாக இல்லை” என பதிவிட்டுள்ளார்.

போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட போது, டிரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல் நிகழ்வு குறித்து பதிலளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர், உக்ரைன் மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.

பொருளாதார தடை

மேலும், 3 வருடங்களாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்ததிலும், உக்ரைனுக்கு உதவியதிலும் நாங்கள் அனைவரும் சரியாக இருந்தோம், இதனை தொடர்ந்து செய்வதும் சரி தான் என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி மோதல் : உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு | Zelenskyy Meets Us Trump Trump Yells At Zelenskyy

ஐரோப்பாவின் கண்ணியம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக தொடக்கத்தில் இருந்து போராடுபவர்களை மதிப்பது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/bZhzebUcgsA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.