முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்து நிறுவனங்களிலும் அலகுகளை நிறுவ ஒப்புதல்!

தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025–2030ஐ நடைமுறைப்படுத்தும் நோக்கில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தனியான டிஜிட்டல் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, துறைசார் டிஜிட்டல் அபிவிருத்திப் பணிகளை நிர்வகித்து ஒருங்கிணைப்பதுடன், தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு முயற்சிகளுடன் இணைந்து செயற்படக்கூடிய வலுவான நிறுவனப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் அபிவிருத்திப் பணிகளை முறையாக முன்னெடுத்து ஒருங்கிணைப்பதற்காக, தனியான ‘டிஜிட்டல் அபிவிருத்தி அலகு’ ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த அலகுகளை நிறுவி செயற்படுத்துவதற்கான கட்டமைப்பை உள்ளடக்கிய பணிச்சட்டத்தை (Reference Framework) GovTech Sri Lanka (Pvt) Ltd நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், தொழில்நுட்பப் புத்தாக்கம், தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒத்துழைப்பு, இணையவழிப் பாதுகாப்பு, இடைச்செயற்பாடு மற்றும் ஆலோசனை உள்ளிட்ட துறைகளில் GovTech Sri Lanka நிறுவனத்தின் நிபுணத்துவத்தை அரச நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, அரச நிறுவனங்களில் டிஜிட்டல் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவதற்காக டிஜிட்டல் அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Source: https://samugammedia.com/digital-revolution-in-government-organizations-approval-to-set-up-units-in-all-organizations-1788926845

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்