முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

கடந்த 8அம் திகதி எல்லை மீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
கைதுசெய்யப்பட்டு இலங்கை வாரியபொல சிறையில் அடைத்தது வைக்கப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க கோரி அவர்களது குடும்பத்தினர் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது, பாம்பன் மீன்வளத்துறை
அலுவலகத்தை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்தியா – தமிழ்நாடு பாம்பனிலிருந்து கடந்த 08ஆம் திகதி நான்கு நாட்டுப்
படகுகளில் 35 கடற்றொழிலாளர்கள் கடலில் கடற்றொழிலுக்கு சென்றவேளை இலங்கை
கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
புத்தளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 

கைது நடவடிக்கை 

இதனை தொடர்ந்து, கடற்றொழில் திணைக்களம் ஊடாக புத்தளம் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அவர்கள் வாரியபொல
சிறையில் 78 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் | Hunger Protest India To Release Indian Fishermen

இதன்போது, அவர்கள் கடற்றொழிலுக்கு சென்ற படகுகள், சாதாரண நாட்டுப் படகுகள் என்றும், ஆனால்
தவறுதலாக அது விசைப்படகுகள் என வழக்கு பதியப்பட்டதனாலேயே அவர்கள் சிறை
வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட
35 கடற்றொழிலாளர்களையும் விடுவிப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்றிலிருந்து கடற்றொழிலாளர்களின் குறித்த குடும்ப உறுப்பினர்கள் இந்தியா – தமிழ்நாடு, பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், போராட்டத்தை கைவிடுமாறு தமிழ் நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கையில் கைது
செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் அது
பலனளிக்காத நிலையில்
உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.