முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: கோட்டாபயவின் நீதிமன்ற கோரிக்கை சந்தேகங்களை அதிகரிக்கிறது! நஜீத் இந்திக்க எம்.பி.

 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை அரசாங்கமாகிய நாங்கள் செய்யவில்லை என்றும், அதனை விசாரணை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுமே சுயாதீனமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தன்னை கைது செய்ய வேண்டாம் எனக்கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது, தமக்கு மட்டுமல்லாது நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கும் அவர் மீது ஒரு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகக் கூறினார்.

தாக்குதலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு நபர், ‘என்னை கைது செய்ய வேண்டாம்’ என்று நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், அப்படியென்றால் இதில் ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

திருடன் பிடிபடுவதற்கு முன்னர் அவசரமாக தப்பியோட முயல்வதைப் போன்ற ஒரு கிராமத்துப் பழமொழிக்கு அமைவான உதாரணமாகவே இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அவர் சாடினார். 

மேலும், கடந்த காலங்களில் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்படப் போகிறார்கள் என்பது குறித்து அவர்களின் சகாக்கள் முன்னரே கூறிவந்ததை சுட்டிக்காட்டிய அவர், தமக்குத் தெரியாவிட்டாலும் இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/easter-attack-case-gotabayas-court-request-raises-more-doubts-mp-najeeth-hendrick-1781674931

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.