மும்பை மற்றும் இலங்கைக்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் கப்பல் இன்று (21) காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இம்முறை கப்பல் பயணத்தின் மூலம் 644 சுற்றுலாப் பயணிகள் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிடவுள்ளனர்.
அத்துடன், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தையும் பார்வையிடுவதற்காக பல சுற்றுலாப் பயணிகள் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ள குறித்த கப்பல், மாலை மீண்டும் அங்கிருந்து புறப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை கடந்த 14 ஆம் திகதியும் மும்பையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சுற்றுலாக் கப்பல் 862 சுற்றுலாப் பயணிகளுடன் காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சர்வதேச சுற்றுலாக் கப்பல்கள் வருகை தருவது, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம், வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று, சமய மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்கு சர்வதேச அளவில் மேலும் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




