முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல்

காசாவில் (Gaza) போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu), காசா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பலஸ்தீனத்தை (Palestine) உடைத்து இஸ்ரேல் (Israel) உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறதது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா (United States) வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இஸ்ரேல் – பலஸ்தீனம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் (Hamas) நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பலஸ்தீனம் மீது போரை அறிவித்து.

போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது.

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல் | Netanyahu Offers Millions Release Hostages Gaza

இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்றையதினம் (19.11.2024) காசாவிற்கு சென்றுள்ளார்.

தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

பணயக்கைதிகள்

காசாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தநெதன்யாகு, “ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது” என்று கூறியுள்ளார். 

காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிவு பற்றி வெளியான தகவல் | Netanyahu Offers Millions Release Hostages Gaza

அதேபோல இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களை மீட்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இன்னும் 101 பணயக்கைதிகள் மீட்கப்படாமல் உள்ளதுடன் போரின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து இஸ்ரேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக தலையிட்டு கூட போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இதற்கெல்லாம் கவலைப்படாமல் காசாவுக்கு சென்று நெதன்யாகு பேட்டியளித்திருப்பது, பலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/embed/97wdVHd0zkU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.