முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (10) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக, பணவீக்கம் மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் குறித்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம், குடும்ப வருமானம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவும் அடிப்படை பௌதீக வசதிகளின் குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சவால்கள், பாடசாலைக் கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கு மட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

நீண்டகாலமாக குறித்த பிரதேச மக்கள் எதிர்கொண்டு வரும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி, அவற்றுக்குத் தேவையான தலையீடுகளை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

அதேவேளை, குறித்த பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை பேணுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம். தாஹிர், டாக்டர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/special-discussion-on-the-issues-of-the-people-in-the-north-east-and-hill-country-1789025844

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.