யாழ்ப்பாணம் (Jaffna) – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (9.1.2025) யாழ்ப்பாணம் – காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்தில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட நடவடிக்கையின் போது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழில் படகை (01)
கைப்பற்றியதுடன் 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
சட்டவிரோத மீன்பிடி நடைமுறை
வெளிநாட்டு கடற்றொழில் படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளை கட்டுப்படுத்த
கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து
மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில்
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த கடற்படை மற்றும் கடலோரக்
காவல்படையின் இந்திய கடற்றொழில் படகுகளை கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில்
நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஓப்படைக்கப்படவுள்ளனர்.