நெல்லியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருந்தொகை பண மோசடியுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் இருந்து, வெளிநாட்டு நாணயத் தாள்கள் உள்ளடங்கலாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாவரை அண்மையில் மோசடி செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பில் காவல்துறையினல் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்களாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, சந்தேகநபர்களிடம் இருந்து ஒருதொகைப் பணம் மீட்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

