முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இன்றுமாலை 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம்(jaffna) அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில்
விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்த சம்பவம் இன்று மாலை 4:30
மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற
முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

பேரனுடன் தோட்டத்திற்கு சென்ற சிறுவன்

  தனது பேரனுடன் தோட்டத்துக்கு
சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர்
மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இன்றுமாலை 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் | 10 Year Old Boy Dies After Falling Into Well

 வாளியினை
கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள்
விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 சடலம் அச்சுவேலி பிரதேச
வைத்தியசாலையின் ல் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவெலி
காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (25) யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர்
வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதன்போது இணுவில்
மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் ஜீவன்சன் (வயது 20) என்ற இளைஞனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு தெல்லிப்பளை பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் குறித்த
இளைஞன் நேற்றையதினம் தந்தையின் மரக்காலைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு
தெல்லிப்பளையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு தொட்டியினுள் தண்ணீர் நிரப்பிவிட்டு நீச்சலடித்துள்ளார்.
இதன்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பின்னர்
மகனை காணாத நிலையில் பெற்றோர் அவரை தேடியவேளை அவரது சடலம் தண்ணீரில் மிதந்தவாறு
காணப்பட்டது.

பின்னர் அவரது சடலமானது மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.