புதிய இணைப்பு
வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி
வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட
வைத்திய அதிகாரி மருதங்கேணி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை
(23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும்
அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் மேற்படி
சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவே பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலையில் (Base Hospital, Point Pedro) சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியிடம் வாக்கு மூலம்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய
அதிகாரி சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதன் காரணமாக தேவையான சட்ட
நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை காவல்துறையினர் ஊடாக
மருதங்கேணி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் காவல்துறையினர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற
போது மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சிறுமி வாக்குமூலம்
வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து
தாக்கியதாக கூறப்படும் பெண்ணின் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு வீடு
பூட்டி இருந்ததனால் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அவர்களுக்கு அறிவித்தல்
வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பால் இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தொலைபேசி வழியாக
முறையிடப்பட்டுள்ளது.
செய்திகள் – பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) 14 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர்
சரமாரியாக தாக்கிய கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாய் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை
இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றுனை எடுத்து உண்டு கொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்.
வேதனை மற்றும் அவமானம்
இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/embed/NSWqcX37Oto