மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு
மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது
செய்யப்பட்டு இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் குறித்த12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
12 பேரும் விடுதலை
கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில்
மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
அதனை
தொடர்ந்து இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும்
விடுதலையாகி குறித்த முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்