2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 9 பாடங்களிலும் 13,392 மாணவர்கள் A சித்தி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயககம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்க நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
உயர் தரத்திற்கு தகுதி பெற்றோர்
இந்த ஆண்டு 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர், இது பரீட்சை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 73.45% ஆகும். அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்கள் 2.34% சதவீதம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


