இலங்கைக்கு 600 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிவந்த பாகிஸ்தான் கடற்றொழில் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த கடற்றொழில் கப்பலில் இருந்த பலுசிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த14 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கிலான மக்கள் வெளியேற்றம்
கண்காணிப்பு விமானங்கள்
இந்த நடவடிக்கைக்காக இந்திய கடலோர காவல்படை கண்காணிப்பு விமானங்களையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிய கப்பலில் இருந்து 78 பொதிகளில் 86 கிலோ ஹெரோயின் அடைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: சிறுவன் பலி,பலர் காயம்
போதைப்பொருளின் பெறுமதி
மேலும் போதைப்பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போதைப்பொருள் கையிருப்பு இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், இலங்கைக்குள் கொண்டு செல்லும் நோக்கில் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பஹிதாருக்கு அழைத்து செல்லபட்டுள்ளனர்
கொலம்பியாவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: 9 வீரர்கள் பலி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |