முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை : தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

புதிய இணைப்பு

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த மேன்முறையீடு கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மேன்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை வழங்கும்போது தொடர்புடைய விசாரணையில் தாங்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலனையில் எடுத்துக்கொள்ளவில்லை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை : தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு | 16 Years In Prison For Ex Chief Minister

முதலாம் இணைப்பு

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (02) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் (S.M. Ranjith) மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன (Shanthi Chandrasena) ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை : தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு | 16 Years In Prison For Ex Chief Minister

இந்த நிலையிலே குறித்த இருவருக்கும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் தலா 200,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may like this 

https://www.youtube.com/embed/KRuxp8nsXVM

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.