முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதான 17 இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களில் 13
கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு கடற்றொழிலாளர்களையும்
விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்றைய தினம்(07) மீளவும்
விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் (24) ஆம்
திகதி அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது
செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவு

இவ்வாறு கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை
முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட
நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள
திணைக்களத்தில் ஒப்படைக்கபட்டிருந்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான்
நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் முன்னிலைப்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17
கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கைதான 17 இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | 17 Indian Fishermen Arrested Case Court Order

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இன்றைய
தினம்(7) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய கடற்றொழிலாளர்களில் இரு கடற்றொழிலாளர்களுக்கு கைவிரல்
அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 13ஆம்
திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏனைய 13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய இரண்டு
வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13
பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.