இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக உறுப்பினர்
உட்பட 17 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு
அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்
இந்த ஆண்டு இதுவரை 1416 கிலோகிராம் ஐஸ், 946 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12803 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை டி – 56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உட்பட 1612
சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

