முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24) மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த கடற்றொழிலாளர்களும் மற்றும் படகுகளும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து
வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உடனடியாக விடுதலை

விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதேவேளை கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு
கிறிஸ்துமஸ் பண்டிகை கருப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும்
கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் | 17 Rameswaram Fishermen Arrested Sl

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (23)
திங்கட்கிழமை 400 இற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச்
சென்றனர்.

கடற்றொழிலாளர்கள் இரவு சுமார் 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும்
இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில்
ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சி
மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை
படகையும் அதிலிருந்து 17 கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து
தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான எட்டு
பேர் உள்ளடங்குகின்ற இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வீட்டில் குழந்தைகளுக்கு புத்தாடை
வாங்கவும் கிறிஸ்மஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக நேற்று (23)
மாலை மூன்று மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இரவு 12 மணிக்கு
இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் | 17 Rameswaram Fishermen Arrested Sl

இதனால் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை எங்களுக்கு கருப்பு கிறிஸ்து மஸாக
மாறிவிட்டதாகவும் உடனடியாக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து தாயகம் அனுப்பி
வைக்குமாறு சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களிடம் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை
வைத்துள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து
வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.