மேல் மாகாணத்தில் செயற்படும் பொலிஸ் நிலையங்களின் 17 பொறுப்பதிகாரிகளை
இடமாற்றம் செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர்; பிரியந்த வீரசூரிய கோரிக்கை
விடுத்துள்ளார்.
எனினும், இந்த இடமாற்றக் கோரிக்கைக்கான கூடுதல் விபரங்களை வழங்குமாறு தேசிய
பொலிஸ் ஆணைக்குழு, அவரிடம் கேட்டுள்ளது
நடத்தை தொடர்பான புலனாய்வு அறிக்கைகள்
இந்தக் கோரிக்கையின்படி கொழும்புப் பகுதியில் உள்ள பல முக்கிய பொலிஸ்
நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இடமாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நடத்தை தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் இந்த இடமாற்றத்திற்கான முக்கிய
காரணங்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், இதற்கான குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவொரு ஓழுங்கு விசாரணையும்
இல்லையென்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இடமாற்றங்களுக்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்றும்,
இடமாற்றங்களுக்கு முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் தேசிய பொலிஸ்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரந்த அதிகாரங்கள்
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரை தவிர ஏனைய
அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று கட்டுப்பாடு
மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரந்த
அதிகாரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி
லலித் ஏகநாயக்க கடமையாற்றுகிறார்.
ஓய்;வுபெற்ற அமைச்சகச் செயலாளர் ரேணுகா ஏகநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்டச்
செயலாளர் கே. கருணாகரன், சட்டத்தரணி தில்சான் கபில ஜெயசூரிய, ஜனாதிபதி
சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ் மற்றும் ஓய்வுபெற்ற துணைப் பொலிஸ் அதிகார்p
ஜெயந்த ஜெயசிங்க ஆகியோர் ஆணையக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.