யாழில் கரை ஒதுங்கிய மர்ம நினைவுச் சின்னத்தில் இருந்த 18 புத்தர் சிலைகளை காவல்துறையினர் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த மர்ம வீடு யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கியது.
அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.
மீட்கப்பட்ட சிலைகள்
இதன்போது, மியன்மாரில் இருந்து இந்த நினைவாலயம் வந்து இருக்கலாம் என நம்பபடுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரவு அம்சங்கள் இருப்பதாகவும்
தெரியவருகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி காவல்துறையினர் அதில் காணப்பட்ட 18
புத்தர் சிலைகளையும், செப்பேடுகளையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிலைகள் உட்பட்ட பொருட்கள் தற்பொழுது மருதங்கேணி காவல்
நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.