யாழில் (Jaffna) சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட 18 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடடிக்கை நேற்று (24) மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக குறித்த மாடுகள் ஏற்றி வரப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரங்கள்
இந்தநிலையில், சாவகச்சேரி நகரில்
கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், லொறியை வழிமறித்து சோதனையிட்ட போதே மாடுகள்
மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு, சந்தேக நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.