யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்கள்
இன்று(03.12.2024) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்காலைச் சேர்ந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் ஒரு படகில் பருத்தித்துறை
கடற்பரப்புக்குள் ஊடுருவி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதிமன்றம்
மேற்படி, 18 இந்திய கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.