கொட்டாஞ்சேனையில் ஒருவரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு வெறும் 18 வயது மாத்திரேமே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் கைதானவர்கள்
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மூன்று பேர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் காரும் புறக்கோட்டை, ஆர்மர் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்போது, காரில் கிடந்த ஒரு உயிருள்ள தோட்டாவையும் காவல்துறையினர் அடையாளம் கண்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் ஏராளமான கொலைகள் மற்றும் குற்றங்களுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

