முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு

பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான இழப்பீடாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை இதுவரை விவசாயிகளின் கணக்குகளில் ரூ. 18.5 மில்லியன் தொகையை வரவு வைத்துள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி, தெரிவித்தார்.

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 9,511 விவசாயிகளுக்குச் சொந்தமான 13,392 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வைப்பிலிடப்பட்ட பணம்

பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளில் ஒரு பகுதியினருக்கும் இந்தப் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு | 185 Million Rupees Credited To Farmers Accounts

அம்பாறை, அனுராதபுரம், மன்னார் மாவட்டங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மீதமுள்ள விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடு இந்த மாத இறுதிக்குள் உடனடியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2024) நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்போகத்தில் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்குவது ஜனவரி 30 ஆம் திகதி தொடங்கியது.

உரிய இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் 

மேலும் இந்த மாதம் 28 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் ‘1918’ என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வேளாண் மற்றும் விவசாய காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு | 185 Million Rupees Credited To Farmers Accounts

இழப்பீடு வழங்குவதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, வேளாண்மை மற்றும் விவசாய காப்புறுதி சபை இந்த இழப்பீட்டுத் தொகையை நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்