முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் கோடீஸ்வர பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தையின் பரிதாப நிலை

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம வைத்தியசாலையில் 45 நாட்களாக பெண் மற்றும் ஆண் ஒருவரின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த இருவருக்கும் பிள்ளைகள் உள்ள போதிலும் ஒருவரேனும் பெற்றோரின் உடல்களைப் பெற வராததால், 45 நாட்களாக இவ்வாறு வைக்கப்பட்டுள்ளன.

பல சந்தர்ப்பங்களில் சடலங்கைள பொறுப்பேற்குமாறு மருத்துவமனை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்களில் யாரும் வராததால், அவர்களின் சடலங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை.

மருத்துவமனையில் அனுமதி

ஏப்ரல் 28 ஆம் திகதி 85 வயதான பெண் மாரடைப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மே 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொழும்பில் கோடீஸ்வர பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தையின் பரிதாப நிலை | 2 Bodies At Homagama Hospital For 45 Days

அந்தப் பெண் தலங்கம – அக்குரேகொட வீதியைச் சேர்ந்தவர், மேலும்  ஏ.எம். பெரேரா என்ற அவரது பாதுகாவலரால் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரணத்தின் பின்னர் யாரும் வராததால் உடலை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாவலரின் முகவரிக்கு பொலிஸாரால் அறிவிப்பு அனுப்பப்பட்டது, ஆனால் பாதுகாவலரும் அவர் வழங்கிய தகவலும் போலியானவை என்பது தெரியவந்தது.

மாரடைப்பு

கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த உயிரிழந்த பெண்ணுக்கு மூன்று மகன்கள் இருந்த போதும் எவரும் சடலத்தை பொறுப்பேற்க வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உயிரிழந்த பெண்ணின் மகனிடம் இருந்து  விவாகரத்து பெற்ற மூத்த மருமகள், வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கோடீஸ்வர பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தையின் பரிதாப நிலை | 2 Bodies At Homagama Hospital For 45 Days  

மற்றொரு நபர் காலி பகுதியைச் சேர்ந்தவர், அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 75 வயதாகும். ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு உறவினரைப் பார்க்கச் சென்றபோது மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 29ஆம் திகதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் உயிரிழந்துள்ளார்.

பாதுகாவலர் வழங்கிய தகவல் போலியானது என்பதால், இந்த நபரின் உடலை வெளியிடுவது சாத்தியமற்றதாகிவிட்டது. அந்தப் பெண்ணுக்கும் ஆணுக்கும் தலா 3 பணக்கார மகன்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென ஹோமாகம ஆதார மருத்துவமனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு சடலங்களும் பிணவறையின் தினசரி அடக்க வசதிகளையும் சீர்குலைத்துள்ளன. இந்நிலையில் குறித்த இரண்டு சடலங்களையும் அடையாளம் காண பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.